பவானியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

பவானியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
X

பவானியில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் டிஎஸ்பி அமிர்தவர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

பவானியில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி தலைமையில் புதன்கிழமை (நேற்று) நடைபெற்றது.

பவானியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (நேற்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானியில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு விதிமுறை கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில், வரும் 18ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா குறித்தும், விழாவில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.


அப்போது போலீசார் கூறியதாவது, கடந்த வருடம் வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகள் வைத்து வழிபட வேண்டும். சிலைகளின் உயரம் 9 அடிக்கு மேலாக இருக்கக் கூடாது. சிலைகளை 18ம் தேதி வைத்து 20ம் தேதிக்குள், அதாவது மூன்று நாட்களுக்குள் கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்க மைக்செட், மேளதாளத்துடன் ஊர்வலமாக செல்லக்கூடாது. பொதுமக்கள் வீட்டுக்குள் வைத்து வழிபடும் சிலைகளை அமைதியான முறையில் நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைத்திட வேண்டும்.


பொது இடங்களில் சிலை களை வைக்கக்கூடாது. மது அருந்திவிட்டோ, விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டால் அடுத்த வருடம் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.இதில் சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் மற்றும் அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர், ஆப்பக்கூடல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்து அமைப்பு நிர்வாகிகள் 20 பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!