ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி
X

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

ஈரோடு மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றப் பொது தேர்தல்கள் 2024-ற்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் அவர்களது வீட்டிலிருந்து வாக்குச் சாவடிக்கு சென்று வர இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஈரோடு மாவட்டத்திலுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை சிரமமின்றி பதிவு செய்ய தங்களது இருப்பிடம் மற்றும் வாக்குசாவடி குறித்த விபரங்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் சக்ஷம் இ.சி.ஐ. ஆப் (SAKSHAM ECI App) என்ற செயலியில் பதிவு செய்தோ அல்லது 1950 மற்றும் 1800 425 0424 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தங்களது இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்யவும், அதன் பின்னர் மீண்டும் இருப்பிடத்திற்கு திரும்ப அழைத்து வரவும் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த சிறப்பு வசதியினை 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!