/* */

கனரா வங்கி சார்பில் காளான் வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக காளான் வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கனரா வங்கி சார்பில் காளான் வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி
X

Erode news-கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக "காளான் வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி " (ஆண்/பெண் இருபாலரும்) வருகின்ற 14-03-2023 முதல் 25-03-2023 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியின்போது, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இதனை தொடர்ந்து பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுவார்கள்.

மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு , ஈரோடு - 638002 என்ற முகவரியில் பயிற்சி நடைபெறும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ள 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Updated On: 14 March 2023 10:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  2. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  4. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு