சென்னிமலையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

சென்னிமலையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
X

பன்னோக்கு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் சாமிநாதன் சனிக்கிழமை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

சென்னிமலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மு‌.பெ.சாமிநாதன் சனிக்கிழமை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமினை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.


முகாமில், அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாவது, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் சீனிவாசமூர்த்தி அவர்களின் நினைவாக (ஒளிரும் ஈரோடு, ரோட்டரி இதயம் காப்போம் பேருந்து, ரோட்டரி ஈரோடு சென்ட்ரல், ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை) சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற வருகிறது. இம்முகாமில் முழு உடல் பரிசோதனை, இரத்த கொதிப்பு, இருதய பரிசோதனை, ஈ.சி.ஜி, இருதய ஸ்கேன், எக்கோ, கர்ப்பப்பை பரிசோதனை, மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் மற்றும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

மேலும், பித்தப்பைக்கல் சிறுநீரக கல், மூட்டு மாற்று, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. அதேபோன்று பொது சுகாதாரத் துறையின் மக்களை தேடி மருத்துவ வாகனத்தில் உள்ள மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை அரசுடன் இணைந்து தனியார் துறையினரும் ஈடுபடுவது மிகவும் வரவேற்புக்கு உரியதாகும். அவ்வாறு இருவரும் செயல்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளும் சிறப்பான முறையில் கிடைக்கும். தற்போது, நடைபெறும் இலவச பன்னோக்கு மருத்துவ முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, அட்டவணை பிடாரியூர் - மதுரை வீரன் கோவில், புன்செய் பாலத்தொழுவு கோட்டை மாரியம்மன் கோவில், புன்செய் பாலத்தொழுவு - கோபிநாதசுவாமி லட்சுமி தயாளர் கோவில் மற்றும் பசுப்பட்டி, பூச்சக்காட்டுவலசு - கொடுப்பதியம்மன் கோவில் ஆகிய திருக்கோயில்களை சார்ந்த பரம்பரை முறை வழிசாரா அரங்காவலராக நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணைகளை வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, ஈரோடு ரோட்டரி சென்ட்ரல் சங்க நிர்வாகிகள், ரோட்டரி இதயம் காப்போம் டிரஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!