ஈரோட்டில் தனியார் அறக்கட்டளையினரின் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

ஈரோட்டில் தனியார் அறக்கட்டளையினரின் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
X

ஈரோட்டில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் திண்டலில் தனியார் அறக்கட்டளை சார்பில், பொதுமக்களுக்காக இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி அறக்கட்டளை, ஈரோடு பி.எஸ், ஜி மருத்துவமனை கோவை, வி.எம். கைலாசம் - எஸ்.சி. செங்கோட்டு வேலப்பன் சேவை மருத்துவமனை, திண்டல் மற்றும் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் ரோட்டராக்ட் சங்கம் ஆகிய இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாமை திண்டல் வி.எம். கைலாசம் -எஸ்.சி.செங்கோட்டு வேலப்பன் சேவை மருத்துவமனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தியது.

இம்முகாமிற்கு, வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இம்முகாமை வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். இம்முகாமில் முனைவர் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெயராமன் கலந்து கொண்டார்.

இம்முகாமில் பி. எஸ். ஜி மருத்துவமனையின் 8-க்கும் மேற்பட்ட துறையின் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இதில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாக மேலாளர் ராணி, வி.எம்.கைலாசம் - எஸ்.சி.செங்கோட்டு வேலப்பன் சேவை மருத்துவமனை மேலாளர் சம்பத்குமார் மற்றும் ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர் ‌.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!