அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
X

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமினை பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

அந்தியூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், பச்சிளம் குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமை அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள் துவக்கி வைத்தார்.

இம்முகாமில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதுடன், இயன்முறை சிகிச்சை வழங்குதல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுத் தருதல் உள்ளிட்ட சலுகைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்தியூர் வட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.

இதில் சிறப்பு மருத்துவர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் முருகன் மாதேஸா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமன் ஜெயஸ்ரீ மேற்பார்வையாளர் லிங்கப்பன் தவிட்டுப்பாளையம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாலு சிவக்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil