ஈரோட்டில் துரித உணவு தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி; நவ.27ல் துவக்கம்

ஈரோட்டில் துரித உணவு தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி; நவ.27ல் துவக்கம்
X

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஈரோட்டில் துரித உணவு தயாரித்தல் குறித்த இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் துரித உணவு தயாரித்தல் குறித்த இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில், துரித உணவு தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி வரும் நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை உணவு உள்பட அனைத்தும் இலவசம் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்வோர் அவர்களது குடும்பத்தாருக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதற்கான முன்பதிவு, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகம் 2ஆவது தளம், கொல்லம்பாளையம் புறவழிச் சாலை. ஈரோடு 638002 எனும் முகவரியில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு 0424-2400338, 8778323213, 7200650604 ஆகிய கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!