ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி: ஜூலை 22ம் தேதி தொடக்கம்
Erode news- கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.
Erode news, Erode news today- கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி ஈரோட்டில் ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஈரோடு அடுத்த கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலையில் ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வரும் 22ம் தேதி முதல் துவங்கி ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி வரை 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இப்பயிற்சியின் போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்படும். மேலும், பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 0424-2400338, 87783-23213. 72006-50604 கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu