ஈரோட்டில் இலவச செல்போன் பழுது நீக்கம் செய்யும் பயிற்சி! எப்போது துவக்கம் தெரியுமா?

ஈரோட்டில் இலவச செல்போன் பழுது நீக்கம் செய்யும் பயிற்சி! எப்போது துவக்கம் தெரியுமா?
X

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இலவச செல்போன் பழுது நீக்கம் குறித்த பயிற்சி, இந்த மாதம் துவங்குகிறது.

Erode latest News, Erode local News, Erode native News, Erode district News,ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இலவச செல்போன் பழுது நீக்கம் குறித்த பயிற்சி வரும் ஜனவரி 23ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோட்டில் கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், செல்போன் பழுது நீக்கம் குறித்த இலவச பயிற்சி, வரும் ஜனவரி 23ம் தேதி முதல், பிப்ரவரி 28ம் தேதி வரை, 30 நாட்கள் நடக்கிறது.

இப்பயிற்சி பெற, 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியின் போது சீருடை, உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தபின் அதற்கான சான்று வழங்கப்படும். இப்பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும்.

விருப்பமுள்ளவர்கள் "கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம். ஆஸ்ரம்மெட்ரிக்குலேசன் பள்ளி தளம்-2, கரூர் பைபாஸ் ரோடு, கொல்லம்பாளையம், ஈரோடு - 638002 " என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424-2400338, 8778323213,7200650604 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!