கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

கோட்டை பத்ரகாளியம்மன்  கோவில் குண்டம் விழா:  பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
X

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் பத்ரகாளியம்மன்.

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. 29ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து 30ம் தேதி காலை 6 மணிக்கு காவிரி கரையில் சென்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நமக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. 31ம் தேதி இரவு அக்னி கவாளம் எடுத்து ஊர்வலம் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை ) இரவு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகம் முன்பு விறகுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று ( வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.

இதில், ஏராளமான பெண்கள், பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நாளை (4ம் தேதி) மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மூன்று வேலையும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!