அந்தியூர் போரூராட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு

அந்தியூர் பேரூராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் அதிமுக சார்பில் 18 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கோபி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கேஏ. செங்கோட்டையன், இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் பொய்யானது அவர்களால் எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என பொதுமக்களிடையே கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.பிரச்சாரத்தின் போது மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் குருராஜ், அந்தியூர் ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகானந்தம், வேட்பாளர்கள் கலைச்செல்வி குருராஜ், பாலுச்சாமி, பார் மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu