ஓபிஎஸ் வந்தால் சேர்க்க மாட்டோம்: கே.பி.முனுசாமி கறார்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி பிரச்சாரம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் கூறியதாவது: கட்சியை முடக்க வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம், காவல்துறையை அணுகினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கொண்டு சென்றார். எனவே அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம்.
கட்சியினர் ஒற்றை தலைமையை விரும்புகின்றனர். அவருக்கு ஆதரவு இல்லை என்பதால் அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டார். இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற செய்வோம் என்று கூறினாலும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உணர்வுக்கு ஏற்ப அவர்கள் பிரச்சாரம் செய்வார்களா?. என்றார்.
தொடர்ந்து, திமுக தேர்தல் தோல்வி பயம் காரணமாக பல அமைச்சர்களை ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறக்கி உள்ளது. ஏராளமான பணத்தை வாரி இறைக்கிறது. வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். முறையாக நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
கே.எஸ்.அழகிரி கூறுவது போல, தமிழ் மாநில காங்கிரஸ் இடம் இருந்து அதிமுக தொகுதியை தட்டி பறிக்கவில்லை. ஜி.கே.வாசன் தான் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் எதிரணியில், முதல்வர் தான் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவனை பரிந்துரைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, மதுரை மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் எஸ்.எஸ்.சரவணன், மதுரை மாவட்டம் ஊராட்சி மதுரை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இளங்கோவன், பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் முருகர் சேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu