கோபி முன்னாள் எம்பி மறைவு: அமைச்சர் நேரில் அஞ்சலி
கோபி திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி.சண்முகசுந்தரம் நேற்று மறைந்தார். இவரின் மறைவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் வி.பி.சண்முக சுந்தரம் (வயது 80). முன்னாள் எம்பியான இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட போது கருணாநிதிக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல் குழுவில் இடம் பெற்றிருந்தார். 1991,2001ல் கோபி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1996ல் கோபி தொகுதி எம்பி ஆனார்.
இந்தநிலையில், சண்முகசுந்தரம் நேற்று மறைந்தார். இவரின் மறைவுக்கு தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் தயாநிதி மாறன் எம்பி, தி.க.தலைவர் கி.வீரமணி ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பினர்.
மேலும், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், கோபி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன், கோரக்காட்டூர் ரவிச்சந்திரன், கோபி நகராட்சி தலைவர் நாகராஜ், திருப்பூர் சுப்பராயன் எம்பி உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu