ஈரோட்டில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
ஈரோட்டில் உள்ள ஓட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோட்டில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் தேங்காய் சட்னி மற்றும் தயிர், மோர் வகைகள், கிரில் சிக்கன் ஆகிய உணவு பொருட்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடைபெற்ற வருகிறது.
அதன்படி, ரோடு மாநகராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன் மற்றும் அருண்குமார் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, ஏற்கனவே சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 12 லிட்டர் தேங்காய் சட்னி மற்றும் சமைத்த நிலையில் வைக்கப்பட்டிருந்த கிரில் சிக்கன் இறைச்சி வகைகள் மூன்றரை கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அழித்தனர்.
இதுதொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் கூறியதாவது, மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வு தொடரும். உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu