ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு தயாரித்தல் போட்டி

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு தயாரித்தல் போட்டி

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உணவு தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கல்லூரியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு விடுதி மேலாண்மை துறை மற்றும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு உணவு தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு விடுதி மேலாண்மை துறை மற்றும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு உணவு தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு விடுதி மேலாண்மை துறை மற்றும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி இணைந்து மாணவ, மாணவியர்களுக்கு "பட்டிங் செ ஃப் குக் வித் கோ ப்ரோ " என்ற தலைப்பில் உணவு தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது.


இந்தப் போட்டியில் பல்வேறு துறையில் இருந்து 50க்கும் மேற்பட்ட குழுக்கள் கொண்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். போட்டிக்கு, கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் எச்.வாசுதேவன் முன்னிலை வகித்தார். போட்டியினை, உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறையின் தலைவர் எஸ்.கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்தனர்.

போட்டியின் முடிவில் முதல் பரிசினை இறுதியாண்டு வணிகவியல் துறையை சார்ந்த கே.பவிக்ஷனா, டி.கவிதா, கே.தேவதர்ஷினியும், இரண்டாம் இடத்தை உயிர் வேதியல் துறையை சார்ந்த எம்.மகாதர்ஷினி, ஆர்.பி. சுபா ராணி, வி.பூவரசனும், மூன்றாம் இடத்தை கணினி துறையை சார்ந்த பி.கே.நந்தினி, எஸ்.துர்கா, எம்.காஞ்சனாவும், நான்காம் இடத்தை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறையை சார்ந்த எம்.பி.தாருன்யா, எஸ். லக்ஷனா, ஈ.கங்கா ஆகியோர் பெற்றனர்.


மேலும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் எச்.வாசுதேவன் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
Similar Posts
பக்கவாதத்தின் அபாயத்தை காட்டும் ரத்த வகை: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
குருவரெட்டியூரில் காசநோய், மழைக் கால நோய் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு தயாரித்தல் போட்டி
எதுக்கு ஆயுத பூஜை செய்யணும்..?
அந்தியூரில் 2 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ
1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் முத்துசாமி
நாளை ஆயுதபூஜை: ஈரோட்டில் பூக்கள்-பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்..!
மாரடைப்பு வந்தால் என்ன செய்யணும்? இதயநோய் நிபுணரின் ஆலோசனை..!
1 இல்ல இனி 3..! யூடியூப்பில் அதிரடி மாற்றம்..! கொண்டாட்டம்தான்..!
நோபல் பரிசு அறிவிப்புகளில் கவனத்தை ஈர்த்த செயற்கை நுண்ணறிவு
புது ஃபோன் வாங்க போறீங்களா? இந்த மாசம் இதெல்லாம் ரிலீஸாகுது பாத்துட்டு வாங்குங்க..!
அதிர்ச்சி ஐடியா..! ஒரே ஒரு இமெயில்.. வெளியிலிருந்தே உங்க செல்போனில் ‘App Install’ எப்படி?
செயற்கை நுண்ணறிவு மூலம்  புரத புதிருக்கான  தீர்வு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றது