பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கொடிவேரி அணை 2வது நாளாக மூடல்

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கொடிவேரி அணை 2வது நாளாக மூடல்
X

கொடிவேரி தடுப்பணையில் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

பவானி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 2வது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டது.

பவானி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 2வது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக செல்கிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொடிவேரி தடுப்பணையில் 1,120 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. அணையில் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால், இன்று (நவ.9) வியாழக்கிழமை 2வது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!