கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
X

கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று (13ம் தேதி) சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இன்று (13ம் தேதி) சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ளது கொடிவேரி தடுப்பணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த தடுப்பணையில் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருவது வழக்கம்.

இந்நிலையில், பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சத்தியமங்கலம் , பவானிசாகர், கொடிவேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி வினாடிக்கு 1,020 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று (13ம் தேதி) சனிக்கிழமை கொடிவேரி அணையை மூடி, சுற்றுலாப் பயணிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து, கொடிவேரி தடுப்பணையில் இருந்து அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை, அணையின் முன்பு உள்ள பாலத்தின் மீது நின்று பார்த்து செல்கின்றனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு