தத்தளிக்கும் பவானி காவிரி கரையோர மக்கள்: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

தத்தளிக்கும் பவானி காவிரி கரையோர மக்கள்: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
X
கோபி கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
River Flooding- பவானி காவிரி கரையோரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோபி கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

River Flooding- கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஏற்கனவே, அணையில் 120 அடி தண்ணீர் நிரம்பிய நிலையில், உபரிநீர் அனைத்தும் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால், விநாடிக்கு 51,000 கன அடியாக இருந்த உபரி நீர் வெளியேற்றம், நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால், கரையோர பகுதிகளில் வெள்ள நீர் படிப்ப டியாக உயரத் தொடங்கியது. கரையோரத்தில் ஓடிய வெள்ளம் நள்ளிரவில் படிப்படியாக உயர்ந்து.


இந்த நிலையில், ஏற்கனவே, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் கரையோர பகுதி மக்கள் உடைமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, விடிய விடிய மேடான பகுதிகளில் காத்திருந்தனர். வீட்டிலிருந்து எடுத்து வரமுடியாத பொருட்களை மேடான பகுதியில் வைத்து வீட்டை பூட்டி விட்டு வெளியேறினர். மேலும், பலர் நேற்று பரிசலில் சென்று உடமை களை மீட்டு வந்தனர்.


பவானியில் கந்தன் நகர், காவிரி வீதி, பசவேஸ்வரர் வீதி, பழைய பாலம் குப்பம், தலைமை நீரேற்று நிலையம் பின்புறம் என கரையோரப் பகுதியில் 90-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசித்த 200-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு, பவானி நகராட்சி அம்மா உணவகத்திலிருந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.


இதனைத்தொடர்ந்து, கோபி கோட்டாட்சியர் திவ்யதர்ஷினி தலை மையில் தாசில்தார் முத்துகிருஷ்ணன், நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகராட்சி ஆணையாளர் தாமரை மற்றும் அதிகாரிகள் கரையோரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது என அதிகாரிகள் ஏற்கனவே, கடந்த மாதம் 16ம் தேதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.33 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. தற்போது மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை தொடர்வதால் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கும் என வெள்ள அபாயம் உள்ளதால் பொது அஞ்சப்படுகிறது. இதனால், கரையோர பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!