ஈரோட்டில் நாளை வேட்பாளர்களின் வரவு செலவு குறித்த ஒத்திசைவு கூட்டம்
பைல் படம்.
வேட்பாளர்களின் வரவு செலவு குறித்த முதல் ஒத்திசைவு கூட்டம் ஈரோட்டில் நாளை (4ம் தேதி) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் செலவின பார்வையாளராக லட்சுமி நாராயணா எக்ஸ் ஐஆர்எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் வகையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது வேட்பாளரின் முகவர் ஆகியோர் தங்களது தேர்தல் வரவு செலவு கணக்கு ஒத்திசைவு கூட்டமானது நாளை (4ம் தேதி) காலை 10 மணி முதல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
எனவே, வேட்பாளர்கள் தங்களின் வரவு செலவு பதிவேடு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வரவு செலவின ரசீதுகள் ஆகியவற்றுடன் தவறாது கலந்து கொண்டு சமர்பிக்க வேண்டும். தேர்தல் வரவு செலவு ஒத்திசைவு இரண்டாவது கூட்டமானது வருகின்ற 11ம் தேதியும், மூன்றாவது கூட்டம் 17ம் தேதியும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu