ஈரோடு அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

ஈரோடு அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
X

முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுப் பேரணியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோட்டில் அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோட்டில் அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரோடு மாவட்டம் ஈ.பி.பி. நகர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர்கள் முதலாம் வகுப்பு சேர்க்கை பேரணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தொடர்ந்து , ஈரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த 10 மாணவ, மாணவியர்களுக்கு மலர் கொத்து, எழுத்துப் பலகை மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். பின்னர், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு சால்வை அணிவித்து உற்சாகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார், ஆய்வாளர் மோகன் குமார், 2ம் மண்டல குழு தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai solutions for small business