ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் தீத்தடுப்பு தொண்டு வாரம் கடைபிடிப்பு

Erode news- நந்தா பொறியியல் கல்லூரியில் தீத்தொண்டு வாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தீத்தடுப்பு உபகரணங்களுடன் பெருந்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் வீரர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கும் காட் சி.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நந்தா பொறியியல் கல்லூரியில் தீத்தடுப்பு தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் விவகாரத் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத் துறையும் இணைந்து ஈரோடு பெருந்தறை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் "தீத்தொண்டு வாரம்" கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி சண்முகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு பெருந்துறை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் நிலைய அலுவலர் நவீந்தரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் "நாட்டின் கட்டமைப்பை பேணிக்காப்பதற்கு தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதனை உறுதி செய்வோம்" என்கிற உறுதி மொழியினை கல்லூரியின் முதல்வர் யு.எஸ்.ரகுபதி முன்னிலையில் மாணவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து தீப்பற்றி எரியும் மக்களைக் காப்பாற்றும் முறைகள், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிக்காமல் இருப்பதற்கான தடுப்பு முறைகள் மற்றும் தீப்பற்றி எரியும் போது தீயணைப்பான் உதவியுடன் அதனை அணைப்பதற்கான வழிமுறைகள் போன்றவற்றை மாணவர்கள் மற்றும் நந்தா கல்வி நிறுவங்களில் பணிபுரியும் ஒட்டுனர்கள் முன்னிலையில் நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு உதாரணங்களுடன் செய்முறை விளக்கம் அளித்தார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த மாணவர்கள் விவகாரத் துறையின் மூத்த அதிகாரி எம்.கே.மூர்த்தி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முருகானந்தம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu