சித்தோடு அருகே கழிவு பஞ்சு ஆலையில் தீவிபத்து: பேல்கள், எந்திரங்கள் எரிந்து சேதம்

சித்தோடு அருகே கழிவு பஞ்சு ஆலையில் தீவிபத்து: பேல்கள், எந்திரங்கள் எரிந்து சேதம்
X

பஞ்சு அறவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்து.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கழிவு பஞ்சு அறவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்கள், எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

பவானி அடுத்த சித்தோடு அருகே கழிவு பஞ்சு அறவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்கள், எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு, வசந்தம் பேரடைஸ் பகுதியைச் சேர்ந்தவர் பூபதிராஜா (45). இவருக்குச் சொந்தமான கழிவு பஞ்சு அறவை ஆலை, சித்தோட்டை அடுத்த வாய்க்கால்மேடு பகுதியில் உள்ளது. இங்கு, நேற்று (திங்கட்கிழமை) 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது எதிர்பாராமல் கழிவு பஞ்சு குடோனில் தீப்பிடித்துள்ளது.

அப்போது, தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதனால், பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பழனிச்சாமி தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். மேலும், ஆலையின் பக்கவாட்டு சுவற்றை ஜேசிபி எந்திரம் கொண்டு உடைத்து, தீயை அணைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தீ கட்டுக்குள் வராததால் ஈரோட்டிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்ததால், தண்ணீர் டேங்கர் லாரிகள் கொண்டு வரப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் ஆலையில் பிடித்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. சேத மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கலாம் என தெரிகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil