பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து
X

கொண்டத்துகாளியம்மன் கோவில்.

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து செய்து, குண்டம் இறங்கவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவுக்காக வருகிற டிசம்பர் 30-ம் தேதி பூச்சாட்டப்படுகிறது. அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி குண்டம் விழா நடைபெறுகிறது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள்.


ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில் முறைதாரர்கள் மற்றும் பூசாரிகள் மட்டும் இறங்குகிறார்கள். இதேபோல், அடுத்த மாதம் 14-ம் தேதி நடைபெற இருந்த தேரோட்டமும், 15-ம் தேதி நடக்க இருந்த மலர் பல்லக்கு ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் ஜனவரி 22-ம் தேதி மறுபூஜை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் திருவிழா கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story