நெரிஞ்சிப்பேட்டை - பூலாம்பட்டி இடையே மீண்டும் விசைப்படகு போக்குவரத்து
Erode News- நெரிஞ்சிப்பேட்டை - பூலாம்பட்டி இடையே தொடங்கியது விசைப் படகு போக்குவரத்து.
Erode News, Erode News Today- காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் நெரிஞ்சிப்பேட்டை - பூலாம்பட்டி இடையேயான விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், கடந்த 30ம் தேதி மாலை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதனையடுத்து, அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் அப்படியே திறக்கப்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வெள்ள அபாயம் ஏற்பட்டதால், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த விசைப்படகுப் போக்குவரத்து கடந்த 29ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (8ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டதால் இன்று முதல் படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக 8 கிலோமீட்டர் சுற்றி பூலாம்பட்டிக்கு சென்று வந்த நிலையில் தற்போது படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu