அந்தியூர்: சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்து பெண் யானை உயிரிழப்பு

அந்தியூர்: சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்து பெண் யானை உயிரிழப்பு
X

அந்தியூர் அருகே வனப்பகுதியில் சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்தது யானை உயிரிழப்பு

அந்தியூர் அருகே உள்ள சென்றும் பட்டி வனப்பகுதிக்குள் சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்து பெண் யானை உயிரிழப்பு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர் காடு வனப்பகுதியில் உள்ள நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று அங்குள்ள சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளது.

தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர், தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்,

தொடர்ந்து இது குறித்து மருத்துவர் தெரிவிக்கையில் யானை வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டு எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் யானையின் கோரை பற்கள் அகற்றப்பட்டு, உடலை குழி தோண்டி அடக்கம் செய்தனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!