ஈரோட்டில் துரித உணவு தயாரிப்பு இலவச பயிற்சி: நவ.11ம் தேதி துவக்கம்..!

ஈரோட்டில் துரித உணவு தயாரிப்பு இலவச பயிற்சி: நவ.11ம் தேதி துவக்கம்..!
X

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், துரித உணவு தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி வருகிற நவம்பர் 11ம் தேதி துவங்குகிறது.

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், துரித உணவு தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி வருகிற நவம்பர் 11ம் தேதி துவங்குகிறது.

இதுதொடர்பாக ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில், துரித உணவு தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி வரும் நவம்பர் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை உணவு உள்பட அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்வோர் மற்றும் அவர்களது குடும்பத்தார் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், பயிற்சியானது, ஈரோடு கொல்லம்பாளையம், பைபாஸ் ரோடு ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 0424-2400338, 8778323213, 7200650604 ஆகிய கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது