காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் கவலை..!

காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் கவலை..!

காலிங்கராயன் அணைக்கட்டு.

பவானிசாகர் அணையில் தண்ணீர் போதிய இருப்பு இல்லாததால், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணையில் தண்ணீர் போதிய இருப்பு இல்லாததால், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு 10 மாதங்களுக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படும். ஆண்டுக்கு மூன்று போகம் விளையக்கூடிய இப்பாசனத்திற்கு அட்டவணைப்படி ஜூன் மாதம் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் 30ம் தேதி தண்ணீர் நிறுத்தப்படும்.

இந்தாண்டு பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதனிடையே, நீர்மட்டம் சரிந்ததால் கீழ்பவானி 2ம் போகத்திற்கு முழுமையாக தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை 44 அடிக்கும் கீழே சென்று விட்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 58 அடியாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், இப்போதுள்ள நீர் இருப்பு குடிநீர் தேவைக்கு மட்டுமே உள்ளது.

இந்நிலையில், அட்டவணைப்படி காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு நேற்று 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், அணையில் தண்ணீர் போதிய இருப்பு இல்லாததால் அட்டவணைப்படி தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதால் காலிங்கராயன் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனிடையே, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இருந்தால் மட்டுமே கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story