பெருந்துறை அருகே ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெருந்துறை அருகே ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

Erode news-  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Erode news, Erode news today- பெருந்துறை அருகே பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி கால்வாயில் குறிப்பிட்ட இடங்களில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க கோரியும் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்தும், பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து, ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் பணிகளை முடிக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai powered agriculture