ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா காப்பீடு செய்ய அழைப்பு
பயிர் காப்பீடு செய்வது தொடர்பாக மொடக்குறிச்சி பகுதி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் நடந்து வருகிறது.
பிரதமரின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதால் இயற்கை நிகழ்வால் ஏற்படும் இடர்பாடு, பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறலாம். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத் துக்கு அறிவிப்பு செய்யப் பட்ட 28 பிர்காவில், ஏக்கருக்கு 5.57 ரூபாயில் காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்வதற்கு வருகிற 15ம் தேதி கடைசி நாள் ஆகும். பயிர் காப்பீடு செய்வது தொடர்பாக ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி. சென்னிமலை, பெருந்துறை உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களில் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் நடந்து வருகிறது.
வாகன பிரசாரம் மூலம் விவசாயிகளை சந்தித்து, ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா, ரபி பருவங்களில் இப்கோ - டோக்கியோ பொது காப்பீடு நிறுவனம் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது. கடன் பெறும் விவசாயிகளுக்கு, கடன் வழங்கிய தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் காப்பீடு செய்யும். மற்ற விவசாயிகள், அருகே உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, பொது சேவை மையங்களில் காப்பீடு செய்ய லாம். நடப்பு பசலி ஆண்டுக் கான அடங்கல் சான்று கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்று, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் கார்டு நகல், சிட்டா ஆகியவற்றுடன் செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu