ஈரோட்டில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஈரோட்டில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

விவசாயிகள் குறைதீர் கூட்டம் (பைல் படம்).

ஈரோட்டில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Erode Today News, Erode News, Erode Live Updates - ஈரோட்டில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2024ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படவுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். என்று தெரிவித்துள்ளார்

Tags

Next Story
ai marketing future