/* */

ஈரோட்டில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது.

ஈரோடு தாலுகாவில் நடக்கும் ஜமாபந்தியில் கலெக்டரும், பிற தாலு காக்களில் மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளி ட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பது கட்டாய மாகிறது. இதனால் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டு அதற்கு பதிலாக வரும் 30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது.

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறுதலும், 11.30 மணி முதல், 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தலும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்கள் விள க்கம் அளித்தலும் நடக்க உள்ளது. விவசாயிகள் தங்களது பகுதி விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம் என அறிவு றுத்தப்பட்டுள்ளது.

Updated On: 26 May 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு