ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 107 மனுக்கள் : உடனடி தீர்வுக்கு பரிந்துரை..!

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 107 மனுக்கள் : உடனடி தீர்வுக்கு பரிந்துரை..!
X

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 107 கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 107 கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று) உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை (செப்.29)) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து 107 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:-

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 36 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தற்போது வரை 21574 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டு தற்போது நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம். மேலும் விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் (eKYC) மட்டுமே அடுத்த (15-வது) தவணைத் தொகை பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து திட்டப் பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை விஸ்வநாதன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன், தோட்டக்கலை துணை இயக்குநர் மரகதமணி, முதுநிலை செயலாளர்/துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக் குழு) சாவித்திரி, ஈரோடு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், செயற் பொறியாளர்கள் நீர்வள ஆதாரத் துறை, ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம் உட்பட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்