ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் வருகை குறைவு

ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் வருகை குறைவு
X

காய்கறிகள் (பைல் படம்).

தீபாவளியை முன்னிட்டு ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு விவசாயிகளின் வருகை குறைந்தது.

தீபாவளியை முன்னிட்டு ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு விவசாயிகளின் வருகை குறைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதியில் இருந்து உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாகவும், தரமானதாகவும் கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் உழவர் சந்தையில் விற்பனை அதிகமாக இருக்கும். தீபாவளி தினமான நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 66 விவசாயிகள் மட்டுமே, 15,639 கிலோ காய்கறி, பழம் கொண்டு வந்தனர்.

இதன் மதிப்பு, 4.87 லட்சம் ரூபாய். வாடிக்கையாளர்கள், 2,607 பேர் வந்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைக்கு, 48,127 கிலோ காய்கறி, பழம் விற்பனைக்கு வந்தது. இதன் மதிப்பு, 15.93 லட்சம் ஆகும். தீபாவளியால் சராசரியாக ஒவ்வொரு உழவர் சந்கைக்கும் 20 விவசாயிகள் மட்டுமே வந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!