கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் புதூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் புதூரை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 45) கூலி தொழிலாளி.‌ குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இவரது மனைவி சுந்தராம்பாள். இந்நிலையில் பச்சையப்பன் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5-ம் தேதி மாலை 3 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள கீழ் தோட்டத்து பகுதியில் தென்னை மரத்திற்கு வைக்கப்பட்டிருந்த சல்பாஸ் மாத்திரை (விஷம்) சாப்பிட்டுவிட்டதாக தனது மனைவிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பச்சையப்பன் கோபி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பச்சையப்பனின் தந்தை சென்னியப்பன் அளித்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!