லஞ்சத்தை தவிர்க்க கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டண பட்டியல்

லஞ்சத்தை தவிர்க்க கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டண பட்டியல்

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள சேவை கட்டண விபரம் அடங்கிய பட்டியல்.

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை எதிரொலியால், கட்டண விபரம் அடங்கிய பட்டியல் வைக்கப்பட்டது.

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை எதிரொலியால், அலுவலகத்தில் கட்டண விபரம் அடங்கிய பட்டியல் வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 6ம் தேதி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தற்போது நடைமுறையில் உள்ள சேவை கட்டண விபரங்களின் பட்டியல் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் யாவரும் இதில் சொல்லப்பட்டுள்ள கட்டணத்தை தவிர வேறு பணம் எதுவும் எவரிடமும் செலுத்த வேண்டாம்.

இக்கட்டணத்தை தவிர கூடுதலாக போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரோ அல்லது இடைத்தரகர்களோ (புரோக்கர்), ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியினரோ எவரேனும் பணம் கேட்டால், ஈரோடு கருங்கல்பாளையம் காமாட்சியம்மன் கோயில் வீதியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) என்ற முகவரியிலும், 0424 - 2210898 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story