ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் அட்சய திரிதியை கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் அட்சய திரிதியை கண்காட்சி, விற்பனை
X

ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெற்றுவரும் அட்சயதிரிதியை கண்காட்சி மற்றும் விற்பனை .

ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் அட்சய திரிதியை கண்காட்சி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது

ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் அக்ஷ்யதிரிதியை கண்காட்சி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து விற்பனை நிலைய மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது, ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனை வருகின்ற கடந்த 12-ம் தேதி முதல் தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.


க்கண்காட்சியில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் கலையழகு மிக்க நவரத்தினக் கற்கள், விலை உயர்ந்த ராசி கற்கள், ஒளி வீசும் இதர கற்கள் பதித்த ஐம்பொன் வளையல்கள், ஐம்பொன் காதணிகள், மற்றும் ஐம்பொன் நகைகள் முத்து நகைகள், வளையல்கள் முத்துமாலைகள், ஐதராபாத் முத்து வகைகள், ரூபி எமரால்டு நெக்லஸ், வளையல்கள் மற்றும், சந்தன மாலை, கொலுசுகள், ருத்திராட்சமாலை, ஸ்படிக மாலை, ஸ்படிகவிநாயகர்,ஸ்படிகலிங்கம்,ஸ்படிகபிரமிடு, வகைகள் மற்றும் பவள மாலைகள், ரூபி, மரகதம், நீலக்கற்களிலான மாலை வகைகள், பித்தளை, பஞ்சலோகம், மரம், கற்களால் ஆன சிற்பங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.


மேலும், மொராதாபாத் கலைப்பொருட்கள், ஜெய்பூர் வண்ண ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியம் மற்றும் தட்டுகள், ஆயில் பெய்ண்டிங், தோல் பொருட்கள், வலம்புரி சங்குப் பொருட்கள், அகர்பத்திகள், வாசனை திரவியங்கள், ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்கள், சகரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள், அலாய் மெட்டல், வெள்ளை உலோகத்தால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், காகிதக்கூழினால் செய்யப்பட்ட பொம்மைகள், மாக்கல் விநாயகர், சந்தனக்கட்டைகள், சென்னப்பட்டனா பொம்மைகள், மற்றும் மண்கலை அலங்காரப் பொருட்கள் மற்றும் எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.


பொருட்கள் அனைத்தும், குறைந்தபட்சமாக ரூ.50 முதல் ரூ.1 லட்சம் வரையில் கைவினைபொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. கடன் அட்டைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும். குறிப்பிட்ட பொருட்களுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு. இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பொருட்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!