ஈரோட்டில் இடைநிலை ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்

ஈரோட்டில் இடைநிலை ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்
X

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாநில தலைவர் தியாகுராஜன் தலைமையில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட செயலாளர் ராமசாமி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன் தணிக்கையாளர் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் சங்கர் அறிக்கை வாசித்தார் மாநில பொருளாளர் பிரகாசம் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்து, முடிவில் மாநில இணை செயலாளர் கோபிநாத் கூறினார்.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பிரகாசம் ராமசாமி மற்றும் நிர்வாகி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும். ஏழு ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு உடனே நடத்திட வேண்டும். இப்போது அறிவித்துள்ள மாறுதல் கலந்தாய்வை 2022ல் இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்படாத பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பிறகு மாறுதல் கலந்தாய்வு நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்..

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல ஊக்க ஊதிய உயர்வு, சரண்டர் விடுப்பு, தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் மத்திய அரசு அறிவித்த நாளிலிருந்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில இணைச் செயலாளர் பிலோமினா நன்றி கூறினார்

Tags

Next Story
ai in future agriculture