மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: பவானி கரையோர மக்கள் உடமைகளுடன் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: பவானி கரையோர மக்கள் உடமைகளுடன்  வெளியேற்றம்
X

Erode News- பவானி கந்தன் நகர் பகுதியில் உடமைகளுடன் வெளியேறிய பொதுமக்கள்.

Erode News- மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் , பவானி நகர கரையோர மக்கள் உடமைகளுடன் நேற்றிரவு வெளியேறிச் சென்றனர்.

Erode News, Erode News Today- மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் , பவானி நகர கரையோர மக்கள் உடமைகளுடன் நேற்றிரவு வெளியேறிச் சென்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று மாலை எட்டியது. இதனைத் தொடர்ந்து, அணையிலிருந்து விநாடிக்கு 81 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

தொடர்ந்து , இன்று (31ம் தேதி) காலை 7 மணிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதால், ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரிக் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள், நேற்றிரவு வீட்டு சாமான்களுடன் மேடான பகுதிக்கு சென்றனர்.


பவானி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கந்தன் நகர், அந்தியூர் பிரிவு அருகேயுள்ள பசுவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பாலக்கரை, பழைய பேருந்து நிலையம் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் பொதுமக்கள் மேடான பகுதிக்கு சென்றனர்.

ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கரையோர வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நேற்று இரவு, பீரோ, கட்டில், டிவி மற்றும் உடமைகளுடன் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி மேடான பகுதிக்கு சென்றனர்.

பவானி நகராட்சி, பசுவேஸ்வரர் தெரு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமுக்கு உடமைகளுடன் பொதுமக்கள் வந்தனர். பவானி நகராட்சி சார்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதேபோல், அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியிலும் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?