குவாரி திறக்க மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

குவாரி திறக்க மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
X

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மணல் குவாரி திறக்க கோரி , தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. 

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகள் இயக்கப்பட்டு கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணல், தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டது. இத்தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 55,000 லாரிகள் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2017 ஜூன் மாதம் முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு நேரடியாக மணல் வினியோகம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளில் 6 குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு மற்ற அனைத்து மணல் குவாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழகத்திற்கு தினமும் குறைந்தபட்சம் 60,000 யூனிட் மணல் தேவைப்பட்ட நிலையில் தினமும் 2,500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டது.

இந்த மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அனுமதியின்றி ஆறுகளில் திருட்டு மணல் எடுப்பது, கேரளா , ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் மணல் வாங்கி தமிழகத்தில் அதிகளவில் விற்பனை செய்து போன்றவை நடைபெறுகிறது. இதனால் மணல் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வு ஏற்பட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மணல் தட்டுப்பாட்டை தவிர்த்திட நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும். திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், காவிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும், புதிய மணல் குவாரிகளை திறக்க வேண்டும். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!