'மேம்பாலம் வந்தால் பயணம் எளிதாகும்' -கே.வி. ராமலிங்கம்
ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் கதிரம்பட்டி, கூரபாளையம் பகுதி சின்னமேடு, தங்கம் நகர், பவளத்தாம்பாளையம், நஞ்சனாபுரம், மணல்மேடு, மூலக்கரை, சத்திரம் போன்ற பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
வாக்காளர்களிடம் அவர் பேசியதாவது: ஈரோடு புறவட்ட சுற்றுச்சாலையில் குறிப்பிட்ட பகுதி பிரச்னை தொடர்பான வழக்கு நிறைவு பெற்று, பணி முடிந்து தற்போது நாமக்கல், கரூர் சாலை – ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் வழியாக பெருந்துறை சாலைக்கு வாகனங்கள் எளிதாக செல்கிறது. அதுபோல, திண்டல் அருகே துவங்கி நசியனுார் சாலை வழியாக கனிராவுத்தர் குளம் அடைந்து, சத்திரம் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரும் பாதை விரைவில் முடிக்கப்படும்.
தவிர, காளிங்கராயன் விடுதி முதல் பெருந்துறை சாலை வழியாக திண்டல்மேடு வரை, 300 கோடி ரூபாயில் மேம்பால பணிக்கு மண் ஆய்வு முடிந்து, பணிகள் நடக்க உள்ளது. இப்பணி முடிந்தால், பெருந்துறை சாலை உட்பட பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் வராது.
அதுபோல, விரிவாக்க பகுதிக்கும், கிராமப்பகுதிக்கும் குடிநீர் திட்டம் ஏற்படுத்தி நிறைவேற்றப்படும். இப்பகுதி மக்களின் தேவைகளை அவ்வப்போது கேட்டறிந்து நிறைவேற்றுவோம். இதனை செயல்படுத்த, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போட்டு, வெற்றி பெற செய்யுங்கள் இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu