சிறுவர் நரபலி புகார்: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை

சிறுவர் நரபலி புகார்: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை
X
சிறுவர்களை சித்ரவதை செய்து நரபலி கொடுக்க முயன்ற புகார் குறித்து, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர், ஈரோட்டில் விசாரணை நடத்தினர்.

ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி ராமலிங்கமும் அவரது மனைவியும், தங்களது இரண்டு குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிடுவதாக புகார் எழுந்தது. சம்மந்தப்பட்ட இரண்டு சிறுவர்களும் பெற்றோரிடம் இருந்து தப்பி வந்து, போலீசில் புகார் அளித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வெளியான ஊடக செய்திகளின் அடிப்படையில், தாமாக முன் வந்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது. ஆணையத்தின் உறுப்பினர் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோர் , பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்; அத்துடன், வழக்கு பதிவு செய்த தாலுகா காவல் நிலையத்தில் கோப்புகளை ஆய்வு செய்து போலீசாரிடம் வழக்கு விபரங்களை கேட்டறிந்தனர்.

ஆணைய குழுவினர் கூறுகையில், விசாரணையின் போது, குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளோம். அதை, அறிக்கையாக ஆணையத்தில் சமர்பிப்போம். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர, உரிய சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம். அதுவரை, இந்த ஆணையம் வழக்கினை முழுமையாக கண்காணிக்கும் என்று தெரிவித்தனர்.

பெற்ற மகன்களை நரப்லி கொடுக்க முயன்ற வழக்கில், இதுவரை, சிறுவர்களின் தந்தை ராமலிங்கம், தாய் ரஞ்சிதா, சித்தி இந்துமதி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story