/* */

குவாரிகளை திறக்க வேண்டும் : மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

குவாரிகளை மீண்டும் திறந்து குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

HIGHLIGHTS

குவாரிகளை திறக்க வேண்டும் : மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
X

ஈரோடு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகள் இயக்கப்பட்டு வந்தன. கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணல், தட்டுப்பாடின்றி யூனிட் ரூ.1,300 வீதம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.3,500க்கு கிடைத்தது. இத்தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 55,000 லாரிகள் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக இத்தொழில் இருந்தது.

அதன்பின் கடந்த 2017 ஜூன் மாதம் முதல், இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு நேரடியாக மணல் வினியோகம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 4 ஆண்டுகளில் 6 குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற அனைத்து மணல் குவாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் தினமும் 2,500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டது.

ஆனால் தமிழகத்திற்கு தினமும் குறைந்தபட்சம் 60,000 யூனிட் மணல் தேவைப்படுகிறது. மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அனுமதியின்றி ஆறுகளில் திருட்டு மணல் எடுத்து யூனிட் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்பனை செய்கின்றனர். மேலும் கேரளா , ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மணல் ரூ.8,000த்துக்கு வாங்கி தமிழகத்தில் ரூ.20,000 வரை விற்பனை செய்கின்றனர்.

மணல் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் லாரிகள், லோடு இல்லாததால், நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கு தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளனர். எனவே மணல் தட்டுப்பாட்டை தவிர்த்திட நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும்.

திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், காவிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும், புதிய மணல் குவாரிகளை திறக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 July 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...