காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்

காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்
X

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், கொரோனா நோயாளிகள் மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியன, ஈரோடு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா நோயாளி மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியன, மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் விதமாக ஒரு இலவச ஆம்புலன்ஸ், ஒரு மீட்பு வாகனம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா, இந்த வாகனங்களை ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் ஒப்படைத்தார்.

கொரோனா நோய் பாதித்தோர் எங்கு இருந்தாலும், அவர்களை அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தலுக்காக பயன்படுத்தும் வகையில், இந்த மீட்பு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் படுக்கை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, மாநகர மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், ராஜேஷ்ராஜப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!