விரிவாக்கப் பகுதிகளில் விரைவில் குடிநீர்: கே.வி.ராமலிங்கம்

விரிவாக்கப் பகுதிகளில் விரைவில்  குடிநீர்: கே.வி.ராமலிங்கம்
X
விரிவாக்கப்பகுதிகளில் விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம், நரிப்பள்ளம், அம்மன் நகர், கொங்கம்பாளையம், மாமரத்துப்பாளையம், கருப்பகவுண்டன்புதுார் போன்ற பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

அங்கு வாக்காளர்களிடம், அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது: இந்த தேர்தல் ஒரு குடும்ப கட்சியான தி.மு.க.,வுக்கும், சாமான்யமான அ.தி.மு.க.,வுக்கும் நடக்கும் தேர்தல். கடந்த பத்தாண்டுகளில், அ.தி.மு.க., அரசு மக்களுக்கான திட்டங்களாக ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம், புதைவட மின் கேபிள் திட்டம், மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட நீர் தற்போது வீடுகளுக்கு வழங்கப்படுவதால், மாசு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் மூலம், விரிவாக்கப்பகுதிக்கும் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மிக விரைவில் வீரப்பன்சத்திரம் – கோபி இடையே நான்கு வழிச்சாலை, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை அமைக்கப்படும். இதன் மூலம், விசைத்தறி, அதனை சார்ந்த சாய, சலவை, பிளீச்சிங் தொழில்கள் தடையின்றி நடக்கும். அதை நம்பிய மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். அ.தி.மு.க., அரசின் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம், 1,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும், ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும், இத்தொகுதி மக்களுக்கு கிடைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தின் நலன் கருதி, அ.தி.மு.க., வேட்பாளராகிய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடுவீடாக சென்றும், வாகனத்தில் சென்றும் வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பிரசாரத்தை தொடர்ந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!