தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
X

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில்,  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்..

ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரானா தாக்கம் காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரம் இழந்து சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக தெற்கு மாவட்ட திமுக சார்பில், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!