/* */

மதுக்கடை திறப்பு: சரக்கு பாட்டில்களுக்கு சூடம் ஏற்றிய குடிமகன்கள்

ஈரோட்டில் இன்று மதுக்கடைகள் திறப்பால் குடிமகன்கள் உற்சாகத்துடன் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

மதுக்கடை திறப்பு: சரக்கு பாட்டில்களுக்கு சூடம் ஏற்றிய குடிமகன்கள்
X

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் பண்டிகை, விசேஷ நாட்களில் ரூ.10 கோடி வரை வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் முதலில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் மீண்டும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படத் தொடங்கியது.ஆனால் ஈரோடு ,கோவை உட்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்து வந்தது.

இதனால் நமது மாவட்டத்தை சேர்ந்த மது பிரியர்கள் அடுத்த மாவட்டத்திற்கு சென்று மது வாங்கி வந்தனர். தற்போது ஈரோடு உள்பட 11 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் காலை 6 மணி முதலே டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்க காத்து நின்றனர். மாவட்டம் முழுவதும் 213 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன மது பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது.


குறிப்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டள. மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. மது பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளிச் சென்றனர். சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன. கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன.

ஈரோடு ராஜாஜிபுரத்தில் உள்ள மதுக்கடைகள் மதுப் பிரியர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் மது பாட்டிலை வாங்கிக் கடைய முன் வைத்து சூடம் ஏற்றி வழிபட்டார். மது எங்கள் குலதெய்வம். அதனால்தான் சூடம் ஏற்றி வழிபட்டேன் . கொரோனா நோய் இனிமேல் வராது என்றார். அதேநேரம் பார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள 128 பார்களும் வழக்கம்போல் மூடப்பட்டி இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மதுக்கடைகள் செயல்பட தொடங்கி உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 5 July 2021 9:06 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!