ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு : பா.ம.க ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தளர்வுகளுடன நீட்டிக்கபட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு, கோவை, உட்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் சில தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை, மதுரை உள்பட 27 மாவட்டங்களில் பாதிப்புக் குறைவாக இருப்பதால் அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் கடந்த 15 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் காலை முதல் மாலை வரை இயங்கி வருகிறது.
டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை திறப்பு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று ஈரோடு மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தந்த பொறுப்பாளர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தா.ப.பரமேஸ்வரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய மாவட்ட செயலாளர் பிரபு, மாநில துணைத்தலைவர் எஸ்.எல். பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொ.வை ஆறுமுகம், ராஜேந்திரன், அருள்மொழி, மாநகரச் செயலாளர் எஸ் .ஆர் .ராஜீ,மூர்த்தி கணேஷ் கலந்து கொண்டனர்.
இதைப்போல் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் சிவன், மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் விக்னேஷ், பொறுப்பாளர்கள் சதீஷ் கொங்கு முருகன் மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி, பெருந்துறை, பகுதியில் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.டி.ராசு தலைமையில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுக்கடைகள் திறப்பை கண்டித்து விழிப்புணர்வு பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu