ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இறந்து மிதக்கும் மீன்கள்: கழிவுநீர் காரணமா?

ஈரோடு வைராபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக மீன்கள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன் தண்ணீர் நிறுத்தப்பட்டது.இதனால் வாய்க்காலில் தண்ணீர் முழுமையாக வடிந்து சேரும் சகதியுமாக காணப்பட்டது.

தற்போது மாநகராட்சியின் குடியிருப்புகளின் கழிவு நீர் மட்டும் வாய்க்காலில் கலந்து ஓடி வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக ஈரோடு வைராபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் மீன்கள் இறந்து மிதப்பதால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

எனவே, காலிங்கராயன் வாய்க்காலில் நடந்து வரும் மேம்பாட்டு பணியின் நிதியிலேயே, குடியிருப்புகளின் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!