செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
X
ஈரோட்டில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்க்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2 தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், வேட்பாளர் முகவர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில் , பத்திரிகையாளர்களுக்கான கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சுமார் 150 பேர் பங்கேற்று, கொரானா பரிசோதனை செய்து கொண்டனர்.

இப்பரிசோதனையின் முடிவுகள், நாளை மாலைக்குள் தெரியவரும் என்றும், கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!