ஈரோட்டில் 4.90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோட்டில் 4.90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
X
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படடுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது தினமும் 3000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 4லட்சத்து 90 ஆயிரத்து 862பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது, மாவட்டத்தில் கொரோனா தாக்கம் வேகமெடுத்து உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகள், முதியவர்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் வெளியே வரும்போது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future